இந்த கோடையில் சுவிட்சர்லாந்தில் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்... சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள்
புதிய கொரோனா அலை, வரும் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்கு முன் தாக்க வாய்ப்பில்லை என கருதப்படும் நிலையில், அதற்கு முன்பே சுவிஸ் மக்களில் 15 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
அதாவது, இந்த கோடையில், சுமார் ஒரு மில்லியன் பேருக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
2020, பிப்ரவரி 24இல் கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து, சுவிட்சர்லாந்தில் 3.7 மில்லியன் பேர் மட்டுமே மொத்தமாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கோடையில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள் என்றால், அது மிகப்பெரிய ஒரு எண்ணிக்கையாக இருக்கும்.
அடுத்த இரண்டு மாதங்களில், வாரம் ஒன்றிற்கு 80,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்கிறார் சுவிஸ் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைவரான Tanja Stadler.
ஆனால், ஒரு நல்ல விடயமும் உள்ளது. அது என்னவென்றால், சுவிட்சர்லாந்து மக்களில் வயதுவந்தவர்களில் 97 சதவிகிதத்தினர் தடுப்பூசிகள் பெற்றுள்ளதால், அவர்கள் உடலில் ஏற்கனவே கோவிட் ஆன்டிபாடிகள் உள்ளன, அதாவது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதுதான்!