பிரான்ஸ் முழுவதிலும் திரும்பப்பெறப்படும் உணவுப்பொருள் ஒன்று: காரணம் இதுதான்...
பிரான்ஸ் முழுவதும் உள்ள கடைகளிலிருந்து உணவுப்பொருள் ஒன்று திரும்பப் பெறப்பட்டு வருகிறது.
Carrefour என்ற நிறுவனத் தயாரிப்பான ஸ்ட்ராபெர்ரி ஜாமில் சிறிதளவு பிளாஸ்டிக் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், ஆகவே, அதை உட்கொண்டால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்பதாலும், அது திரும்பப் பெறப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மே 2க்கும் ஜூன் 20க்கும் இடையில் வாங்கப்பட்ட, F101 DDM 04/2024 அல்லது F102 DDM 04/2024 ஆகிய batch number கொண்ட 370 கிராம் போத்தல்களில்தான் பிரச்சினை இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆகவே, அந்த ஜாம் போத்தல்களை வாங்கியோர் அதை உட்கொள்ளவேண்டாம் என்றும், அதை கடையில் திருப்பிக் கொடுக்கவோ, தூர எறிந்துவிடவோ செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அந்த ஜாம் போத்தல்களுக்கான தொகை முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#RappelProduit
— RappelConso (@RappelConso) June 22, 2022
CONFITURE FRAISES 370 G - Carrefour Original
Risques : Inertes (verre, métal, plastique, papier, textile…)
Motif : Risque de présence de corps étrangershttps://t.co/48pv3B4rh3 pic.twitter.com/TybnYg7oPW