ஜேர்மனி ஜேர்மானியர்களுக்கே... சர்ச்சையை உருவாக்கிய வீடியோ வழக்கு புஸ்வாணமானது
ஜேர்மனியில், இளைஞர்கள் சிலர் இனவெறுப்புப் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து, பொலிசார் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்.
சர்ச்சையை உருவாக்கிய வீடியோ வழக்கு
ஜேர்மனிக்கு சொந்தமான Sylt என்னும் தீவில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றின் வெளியே இளைஞர்கள் சிலர் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அந்த இளைஞர்கள், பிரபல பாடல் ஒன்றின் வரிகளை மாற்றி, வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள், ஜேர்மனி ஜேர்மானியர்களுக்கே என பாடுவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோ ஜேர்மனியில் கடும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ் முதலான பல அரசியல்வாதிகள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
புஸ்வாணமான வழக்கு
ஜேர்மனி முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய அந்த வழக்கில், தற்போது ஒரே ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் பல இளைஞர்கள் வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள், ஜேர்மனி ஜேர்மானியர்களுக்கே என பாடுவதைக் காணமுடிந்தது.
ஆனால், வீடியோவில் காணப்படும் பலர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட, ஹிட்லர் சல்யூட் அடித்த ஒரே ஒரு இளைஞர் மீது மட்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு 2,500 யூரோக்கள் வழங்க அந்த 26 வயது இளைஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டால், அவர் மீதான வழக்கும் கைவிடப்படும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |