ஒருவர் பெயரில் 6 இடங்களில் அரசு வேலை.., 9 ஆண்டுகளில் ரூ.4.5 கோடி சம்பளம் பெற்று மோசடி
உத்தரபிரதேச சுகாதாரத் துறையில் ஒருவர் பெயரில் 6 இடங்களில் அரசு வேலையில் சேர்ந்து மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
வேலை மோசடி
இந்திய மாநிலமான உத்தரபிரதேச சுகாதாரத் துறையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'எக்ஸ்-ரே' தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆட்சேர்ப்பில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது ஒரு நபர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் ஆறு வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 403 எக்ஸ்ரே டெக்னீஷியன்களில் ஆக்ராவைச் சேர்ந்த அர்பித் சிங் என்பவரும் ஒருவர்.
இந்நிலையில், அர்பித் சிங் என்பவர் பெயரில் 6 பேர் பல்ராம்பூர், ஃபரூக்காபாத், ராம்பூர், பண்டா, அம்ரோஹா மற்றும் ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் ஒன்பது ஆண்டுகளாக எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியது கண்டறியப்பட்டது.
இவர்கள் அனைவரும் அர்பித் சிங்கின் உண்மையான அடையாளத்தை மறைக்க பல்வேறு இடங்களில் போலி ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த 9 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.4.5 கோடி சம்பளம் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாரா மெடிக்கல் துறை இயக்குநராக உள்ள டாக்டர் ரஞ்சனா கரே லக்னோவில் உள்ள வசிர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் ‘அர்பித்’ என்ற பெயரில் 6 பேர் போலியாக அரசு வேலையில் சேர்ந்துள்ளதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மோசடியில் ஈடுப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |