நாளை முதல்... சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி தொடர்பில் வெளியாகியுள்ள ஒரு தகவல்
சுவிஸ் மாகாணமாகிய ஜெனீவாவில் நாளை முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி Janssen தடுப்பூசி என அழைக்கப்படுகிறது.
ஜெனீவா மாகாணத்துக்கு Janssen தடுப்பூசியின் 7,000 டோஸ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த தடுப்பூசி குறிப்பிட்ட அளவு மட்டுமே உள்ளதால், சுவிஸ் மக்களுக்கு மட்டுமே அது செலுத்தப்பட உள்ளது, அதுவும் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றால் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டுவோர் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு அது பரிந்துரைக்கப்படவில்லை.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி ஒரே டோஸ் தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.