பிரான்சில் மூன்றில் ஒருவர் தடுப்பூசி போட மறுப்பார்கள்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
தடுப்பூசியின் மீது நம்பிக்கையின்மை காரணமாக பிரான்ஸ் நாட்டில் மூன்றில் ஒரு பெரியவர்கள் கொரோனா தடுப்பூசியை தவிர்த்துவிடக்கூடும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் கருத்துக்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தி லான்செட் பப்ளிக் ஹெல்த் பத்திரிகையில் வெளியிட்ட ஒரு ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அதன் குணாதிசயங்களைப் பொறுத்து ஒரு தடுப்பூசியை ஏற்றுக்கொள்வர்கள் என்பதைக் காட்டுகிறது.
குறிப்பாக அவர்களின் முடிவு பெரும்பாலும் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் அது எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் 18-64 வயதுக்கு உட்பட்ட 2000 பெரியவர்களுடன் இரண்டு பகுதி ஓன்லைன் கேள்வித்தாளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பிரான்ஸ் நாட்டில் உழைக்கும் வயது மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், நம்பிக்கையின்மை காரணமாக எந்த தடுப்பூசியாக இருப்பினும் ஏற்க மறுக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் இதுவரை 3,310,496 கொரோனா வைரஸ் வழக்குகளையும் 77,743 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.
ஐரோப்பாவில் இதுவரை அஸ்ட்ராஜெனேகா, மாடர்னா மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.