இந்தியாவில் பெயரே இல்லாமல் இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., ஒரு நாளைக்கு 6 முறை நிற்கும்
இந்தியாவில் பெயரே இல்லாமல் இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம் எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெயரில்லாத ரயில் நிலையம்
இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள மொத்த 7112 ரயில் நிலையங்களில், இந்த ஒரு ரயில் நிலையம் மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கிறது. அதிகாரப்பூர்வ பெயர் இல்லாவிட்டாலும் இந்த ரயில் நிலையம் முழுமையாக செயல்படுகிறது.
இந்த ரயில் நிலையமானது ஒடிசா மாநிலத்தில் ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையே பங்குரா-மாசகிராம் ரயில் பாதையில் அமைந்துள்ளது.
இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தான் ரயில் நிலையம் பெயர் இல்லமால் செயல்படுவதற்கு காரணம்.
இந்த ரயில் நிலையத்தில் ரயில் மேடையின் இருபுறமும் உள்ள மஞ்சள் நிற வெற்றுப் பலகை தான் இரண்டு கிராமங்களின் உள்ளூர் மக்களுக்கு இடையே நடந்த பிரச்சனைக்கு சான்றாக இருக்கிறது.
பங்குரா-மாசகிராம் ரயில் நிலையத்தின் வழியாக ஒரு நாளைக்கு ஒரு ரயில் செல்கிறது. அதன்படி, ஒரு நாளைக்கு ஆறு முறை மட்டுமே பெயரில்லாத ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும்.
மேலும் ஸ்டேஷனில் இறங்கும் புதிய பயணிகள் பெயர் இல்லாததை பார்த்து குழப்பம் அடைவார்கள். பின், உள்ளூர்வாசிகளிடம் விசாரித்த பிறகே அவர்களுக்கு வந்த இடம் சரியாகப் புரியும்.
ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் நபகுமார் நந்தி கூறுகையில், ரரயில்வே சார்பில் ஒரு பெயர் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.
ரயில்வே சார்பில் இந்த ரயில் நிலையத்திற்கு ராய்நகர் என்ற பெயர் வைக்கப்பட்டது. இதற்கு ரெய்னா ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். இதனால் தான் இந்த ரயில் நிலையம் பெயர் இல்லாமல் இயங்கி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்டேஷனில் ரயில்கள் இல்லாதபோது, ஸ்டேஷன் மாஸ்டர் பர்த்வான் நகருக்குப் பயணம் செய்து, ஸ்டேஷனில் புதிய டிக்கெட்டுகளைப் பெறுவார். டிக்கெட்டுகளில் ரயில் நிலையத்தை அதன் பழைய பெயரான ராய்நகர் என்று குறிப்பிடுவதாக அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |