ஒரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி... மொத்தமாக கைவிடப்பட்ட நிலையில் இளவரசர் ஹரி
ஓப்ரா வின்ஃப்ரே உடனான ஒரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு, தனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இருந்தே தனித்து விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடன் ஹரி- மெர்க்கல் தம்பதி மேற்கொண்ட உரையாடல் நிகழ்ச்சி, பிரித்தானிய அரச குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், பிரித்தானிய மக்களில் மேகனுக்கும் ஹரிக்கும் இருந்த மதிப்பு கடும் சரிவை கண்டது.
இந்த இக்கட்டான சூழலில் இளவரசர் ஹரிக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய அவரது லண்டன் நண்பர்கள் பலர் மெளனம் சாதிப்பது, உண்மையில் ஹரி தனித்துவிடப்பட்டுள்ளார் என்பதன் அறிகுறியாக இருக்கலாம் என பிரித்தானிய அரச குடும்பத்தை கூர்ந்து கவனித்துவரும் பலரின் கருத்தாக உள்ளது.
ஆனால் அதேவேளை, மேகன் மெர்க்கலின் நண்பர்கள் பலர் அவரை ஆதரித்து, உண்மையை உள்ளபடியே பேசியிருக்கிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
மேகன் மெர்க்கலின் துணிச்சலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் தமது தோழியான மேகன் மெர்க்கலை தன்னலமற்ற நண்பர் என பாராட்டியுள்ளார்.
ஆனால் இளவரசர் ஹரி இந்த இக்கட்டான சூழலில் ஆதரவின்றி தனித்து விடப்பட்டுள்ளது திடுக்கிட வைப்பதாக பிரபலமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மக்களிடையே, செல்வாக்கு சரிவடைந்துள்ள ஹரி- மேகன் தம்பதிக்கு, கண்டிப்பாக நண்பர்களின் ஆதரவு தேவை. அதை மீட்டெடுக்க ஹரி- மேகன் தம்பதி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரபலங்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
2018ல் மேகன் மெர்க்கல் அரச குடும்பத்தில் இணைந்த பிறகு எவ்வாறு தனித்துவிடப்பட்டதாக உணர்ந்தாரோ,
அதே சூழலில் தற்போது கலிபோர்னியாவில் இளவரசர் ஹரியும் உள்ளார் என இருவருக்கும் நெருக்கமான சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
