கேர்னார்ஃபோன் முகாமில் ஒரு வயது சிறுமி மரணம்: பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவில் நடந்த துயரமான விபத்து சம்பவத்தில் ஒரு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வயது சிறுமி உயிரிழப்பு
கேர்னார்ஃபோன் அருகே உள்ள பிரைன் க்ளோச் கேரவன் மற்றும் கேம்பிங் பார்க்கில் நடந்த ஒரு விபத்தில் ஒரு வயது சிறுமி உயிரிழந்ததை வடக்கு வேல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை காலை 10:20 மணிக்கு, கூடார முகாம் வளாகத்திற்குள்(campsite grounds) சிறுமி மீது வாகனம் மோதியதாக கூறி அவசர அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைந்து செயல்பட்ட அவசர சேவைகள், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் உட்பட, சம்பவ இடத்திற்கு விரைந்தன.
சிறுமி உடனடியாக லிவர்பூலில் உள்ள ஆல்டர் ஹே(Alder Hey) குழந்தைகள் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவ நிபுணர்களின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வடக்கு வேல்ஸ் காவல்துறை இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் குறித்து உள்ளூர் மரண விசாரணை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |