வாயைப் பொத்தி எதிர்ப்பு தெரிவித்த ஜேர்மன் கால்பந்து வீரர்கள்: கத்தாரில் விஸ்வரூபமெடுக்கும் ஒரு பிரச்சனை
கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் களைகட்டிவரும் நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பட்டையை அணிய வீரர்களுக்கு FIFA தடை விதித்துள்ளது.
வாயைப் பொத்தி
FIFA அமைப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜேர்மனி வீரர்கள், ஜப்பான் அணியுடனான ஆட்டத்திற்கு முன்னர் வாயைப் பொத்தி புகைப்படத்திற்கு முகம் காட்டியுள்ளனர்.
@getty
கத்தாரில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், OneLove பட்டைகளை கைகளில் அணிந்து பெரும்பாலான கால்பந்து வீரர்கள் ஆட்டத்தின் போது களமிறங்கினர்.
இந்த நிலையில், அவ்வாறான நடவடிக்கைகள் அடையாளப்படுத்தப்பட்டால் அணி மீது மட்டுமின்றி, அணியின் தலைவர் மீதும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என FIFA அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அமைச்சர் நான்சி பிரேசர்
இதனையடுத்தே, ஜேர்மன் வீரர்கள் புகைப்படக்கலைஞர்களுக்கு முகம் காட்டுகையில் வாயைப்பொத்தி நின்றுள்ளனர். மட்டுமின்றி, ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் நான்சி பிரேசர் தடைசெய்யப்பட்ட பட்டையை அணிந்திருந்தார்.
@getty
அத்துடன் ஜேர்மன் கால்பந்து அணி நிர்வாகமும் வீரர்களுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளது. எஞ்சிய நாடுகளுடன் சேர்ந்து, எங்கள் குரலும் கேட்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிக்கும் OneLove பட்டைகளை அணிந்தால், இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய ஏழு ஐரோப்பிய அணிகளுக்கும் தடை விதிக்க நேரிடும் என்று FIFA அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.