இப்படியொரு குவாலிட்டியான கெமராவா? ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு விருந்து தான்
குவாலிட்டி கெமராவுடன் அசத்தலான பல அம்சங்களை கொண்டு இன்னும் சில தினங்களில் OnePlus 10T 5G ஸ்மார்ட் போன் வெளியாகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கெமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது முதன்மை சென்சாராக 50MP Sony IMX766 சென்சார் கொண்டிருக்கும். இந்த லென்ஸ் ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பிரதான சென்சாருடன், மேக்ரோ கெமராவுடன் கூடிய அல்ட்ரா-வைட் கெமரா உள்ளது. இந்த போன் புதிய இமேஜ் கிளாரிட்டி இன்ஜின் (ICE) தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.
news18
இது கெமரா விவரங்களையும் புகைப்படம் எடுக்கும் வேகத்தையும் மேம்படுத்தும். OnePlus 10T 5G இந்தியாவில் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC செயலி, 32MP முன்பக்க கேமரா, 6.7-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது.
இந்த போனில் 4800mAh பேட்டரி மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறலாம். இதன் விலை $625 என தெரியவந்துள்ளது.