ஜனவரியில் வெளியாகும் OnePlus 12 series Smartphone-கள்: இதன் சிறப்பம்சங்கள் என்ன?
OnePlus 12 series Smartphone-கள் முதலில் சீன சந்தையில் வெளியிட்டு பிறகு உலகெங்கிலும் இந்த புதிய Smartphone-ஐ வெளியிட ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
வருகிற டிசம்பர் 4ம் திகதி தனது புதிய OnePlus 12 series மொபைல்கள் சீன சந்தையில் வெளியாக இருப்பதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருந்தது.
சமீபத்தில் வெளியான தகவலின் படி, 2024 ஜனவரி மாதத்தில் இந்த புதிய OnePlus Smartphone இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்
OnePlus முந்தைய version மொபைல்களை போலவே, இதிலும் OnePlus12, OnePlus12 Pro, மற்றும் OnePlus12R என மூன்று மாடல்களை இந்த 12 series-ல் வெளியிட இருக்கிறது.
சீன சந்தையில் OnePlus12 Smartphone latest Snapdragon 8 Gen 3 Chipset பொருத்தப்பட்டுள்ளது.
இந்த Smartphone 6.82 inch LTPO Display, 2,600 nit Peak Brightness, Sony-யின் Lytia 808 sensor உடனான 48 Mega Pixel Camera, OmniVision OV64B sensor உடனான 64 Mega Pixel Camera, மற்றும் 48 Mega Pixel Ultra wide camera மற்றும் 32 Mega Pixel Selfie Camera கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ரூ.75,000 மதிப்புள்ள Samsung Galaxy Smartphone வெறும் ரூ.10,000 மட்டுமே: Flipkart-ன் தள்ளுபடி விலையில்
மேலும், 100W Fast charging support உடன் வெளியாக இருக்கும் இந்த புதிய OnePlus 12 மொபைல் SuperVOOC அடாப்டர் உடன் வருகிறது.
இது 110V Socket-களில் உபயோகப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க சந்தையில் இதன் Charging speed குறைத்து அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |