OnePlus 13 முதல் முன்னோட்ட காட்சிகள்: Android ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய மாற்றம்!
OnePlus தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் மாடலான OnePlus 13ஐ இந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
OnePlus 13 அம்சங்கள் குறித்த வதந்திகள் பரவியுள்ள நிலையில், வீபோவில்(Weibo) வெளியான லீக் OnePlus 13 இன் முதல் பார்வையை வழங்கியுள்ளது.
வடிவமைப்பு மற்றும் பிராண்டிங்
OnePlus 13 ஸ்மார்ட்போன் அதன் முன்னோடி OnePlus 12 இலிருந்து ஈர்க்கப்பட்டு இருப்பினும் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுள்ளது.
OnePlus 13 full rear and front design #OnePlus #OnePlus13 pic.twitter.com/783A5j7Tdr
— OnePlus Club (@OnePlusClub) October 19, 2024
மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாக, Hasselblad பிராண்டிங் இப்போது முழு கேமரா மாட்யூலிலும் நீட்டிக்கப்பட்டு, சாதனத்தின் மேல் வலது மூலையில் மையப்படுத்தப்பட்டுள்ளது.
கேமரா மாட்யூலிலிருந்து ஓரங்களுக்கு செல்லும் புதிய உலோகப் பட்டை OnePlus 13 க்கு அதன் முன்னோடியுடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமான உணர்வைத் தருகிறது.
மேலும் OnePlus 13 கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சக்தி மற்றும் செயல்திறன்
OnePlus 13 Qualcomm இன் Snapdragon 8 Gen 4/8 Elite செயலியால் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.
இந்த சிப்செட் ஆப்பிளின் A18 Pro ஐ சில பெஞ்ச்மார்க்குகளில் வெல்லும் என்று கூறப்படுகிறது.
திரை மற்றும் பற்றரி
OnePlus 13 6.8-இன்ச் BOE இன் X2 LTPO AMOLED திரையைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிகபட்ச பிரகாசம் 6,000 நிட்ஸ் மற்றும் அதிக பிரகாசம் முறையில் (HBM) 1,600 நிட்ஸ் கொண்டிருக்கலாம்.
6,000mAh திறன் கொண்ட பெரிய பற்றரி 100W வேகமாக சார்ஜ் செய்யும் மற்றும் 50W காந்த வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றையும் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் அம்சங்கள்
OnePlus 13 க்கான மற்றொரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலில் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஒன்றாகும்.
இந்த தொழில்நுட்பம் பொதுவாக ஆப்டிகல் சென்சார்களை விட வேகமாகவும் பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது.
OnePlus 13:
— Jason Castellano (@SteelersBlitz) October 11, 2024
What We Know?
• 6.82" 2K OLEDb120 Hz LTPO BOE X2 micro quad curved display
• Snapdragon 8 Gen 4
• 50 MP Main camera
• 50 MP Periscope camera
• 50 MP Ultrawide Camera
• Hasselblad Color Calibration
• Hasselblad Master Mode
• USB Type C 3.2 port
•… pic.twitter.com/LdWM1OK6xd
மேலும் சாதனம் சாதனம் IP68/69 தரநிலையிலும் நீர் எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |