Sony Camera வசதி கொண்டு அறிமுகமான OnePlus Ace 3 Smartphone: இதன் சிறப்பம்சங்கள் என்ன?
OnePlus நிறுவனம் புதிய தயாரிப்பான OnePlus Ace 3 Smart phoneஐ மார்க்கெட்டில் களமிறக்குகிறது.
முதலில் சீனா மார்க்கெட்டில் வெளியாகும் இந்த போன், அதன்பிறகு இந்தியா உள்ளிட்ட உலக மார்க்கெட்டில் களம் இறங்க இருக்கிறது.
விலையை பொறுத்தவரை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என மார்க்கெட் தகவல்கள் கூறுகின்றன.
இதன் சிறப்பங்சங்கள்
OnePlus Ace 3 Smart phone இந்தியாவில் OnePlus 12R எனும் பெயரில் அறிமுகமாகிறது.
Quality camera மற்றும் Super Power RAM, தரமான Battery ஆகியவற்றுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கிறது.
OnePlus Ace 3 Smart phoneல் 6.74-inch OLED Display ,1.5 Resolution, 120 Hertz refresh rate உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும்.
சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset இருப்பதால் Video editing app மற்றும் Gaming களுக்கு பயன்படுத்த உகந்த Smart phoneஆக இருக்கும்.
OnePlus Ace 3 camera
Camera வை பொறுத்தவரையில் 50MP Sony IMX890 sensor + 8MP Ultra Wide Omnivision OV8D10 sensor + 32MP Telephoto sensor என்கிற Triple rear camera அமைப்பு இந்த Smart phoneல் இருக்கும்.
இதன் மூலம் அட்டகாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும்.
யூசர்களுக்கு சிறந்த செல்பி அம்சத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே 16 MB Camera கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர,display fingerprint scanner,IP68 rating அம்சங்களும் இருக்கும்.
OnePlus Ace 3 battery
Batteryஐ பொறுத்தவரையில் 5500 mAh battery கொடுக்கப்பட்டுள்ளது.இதனால், சார்ஜ் செய்ய 100 Watts fast charging வசதி கூட உள்ளது.
குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும், நீண்ட நேரம் Battery pack கொடுக்கும்.
5G ,USB Type-C port, Wi-Fi AC, Bluetooth 5.2, NFC அம்சங்களும் இருக்கும்.
அதேபோல் ColorOS 14சார்ந்த Android 14 இயங்குதளத்தைக்OnePlus Ace 3 Smart phone கொண்டிருக்கும். 24GB வரை RAM மற்றும் 1TB வரை Storage இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |