தீவிர கேம் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Smartphone! இவ்ளோ சிறப்பம்சங்கள் இருக்கே... விலை என்ன தெரியுமா?
ஒன்பிளஸ் 9RT ஆனது கேம் பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது என சொல்வது போல அமைந்துள்ளது, இதோடு அந்த போனில் பல்வேறு சூப்பரான சிறப்பம்சங்களும் இருக்கிறது.
இந்த மாதம் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9RT ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது. இந்தியாவில் இம்மாதம் இறுதி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் கேமரா உள்ளிட்ட மற்ற அம்சங்கள், ஒன்பிளஸ் 9RT-ஐ போலவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஒன்பிளஸ் 9RT ஆனது SD870 சிப் உடன் வெளியாகலாம் என தகவல் வெளியானாலும், SD888 மூலம் இயக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புகள் இடம்பெற்றிருக்கும்.
இது ஒரு 16MP செல்ஃபி கேமரா சென்சாரை கொண்டிருக்கும், இது ஒரு பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்படும். இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது.
பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 mAh பேட்டரி 65W சார்ஜிங் டெக் சப்போர்ட், NFC, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்அப் உடன் வருகிறது.
இதன் விலையானது ரூ 23,300ல் இருந்து ரூ 34,900 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனானது தீவிர கேம் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்ற வகையில் ஸ்பீடு புரோசஸூக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.