OnePlus நேற்று அறிமுகப்படுத்திய Nord 2 ஸ்மார்ட் போனைப் பற்றி விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?
பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான OnePlus நேற்று இந்தியாவில் OnePlus Nord 2-வை அறிமுகப்படுத்தியது.
Nord அறிமுகப்படுத்திய ஒரு வருடத்திற்கு பின்பு, அந்த நிறுவனம் OnePlus Nord 2-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 50 மெகா பிக்சல் கொண்ட AI கமெராவைக் கொண்டுள்ளது.
இதில் 4500 mah கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord நிறுத்தப்பட்டு, தற்போது இந்த OnePlus Nord 2-வை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஸ்மார்ட் போன் நிறுத்தப்பட்டாலும், குறித்த போனை வாங்கிய பயனாளர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாம்
OnePlus Nord 2 சிறப்பம்சங்கள்
இது MediaTek Dimensity 1200-AI SoC கொண்ட சிப் செட்டால் இயக்கப்படுவதால், இது ஒரு நல்ல வேகமான ஸ்மார்ட் போனாக இருக்கலாம். மேலும், இது 6.43 அங்குலம் கொண்ட முழு ஹச் டி + அல்மோட் டிஸ்பேள் கொண்டுள்ளது.
இதில் 1,080x2,400 பிக்சல்கள் கொண்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் GPU 12GB வரை சப்போர்ட் செய்கிறது. இது Red, Gray Sierra, Blue Haze, மற்றும் Green Woods என நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட் போன் லேட்டஸ்ட் வெர்சன் ஆன, Oxygen OS 11.3-ஆக இயங்குகிறது. பலரின் எதிர்பார்ப்பான கமெரா, இதில் 50 மெகா பிக்சலுடன் AI கமெரா கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இதில் night speed ultra ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. night speed ultra என்றால், குறைந்த வெளிச்சத்தில் கூட, இது ஒரு தெளிவான புகைப்படங்களை உங்களுக்கு எடுக்க உதவும்.
இதன் பேட்டரி முழு சார்ஜ் செய்தால், அதை ஒரு முழுவதுமாக பயன்படுத்தினால் கூட, ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்கும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. இதன் பேட்டரி திறன் 4500 mAh கொண்டுள்ளது. மேலும் இதில் இரண்டு 5G சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு சிம்களை 5G யாக நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
விலை விவரம்
- 6G RAM மற்றும் 128GB= 27999 ரூபாய்.
- 8GB RAM மற்றும் 128GB RAM= 29,999 ரூபாய்.
- 12GB RAM மற்றும் 256 GBRAM= 34,999 ரூபாய்.