சாம்சங்குக்கு போட்டியாக வரும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்! எந்த நிறுவனம் வெளியிடுகிறது தெரியுமா?
ஒன்பிளஸ் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறக்கவுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.
சாம்சங், சியோமி மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி விட்டன. இந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போல்டபில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன.
இதற்கு போட்டியாக ஒன்பிளஸ் களமிறங்குகிறது. ஒன்பிளஸ்-இன் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர்கள் வெளியாக துவங்கி உள்ளன.
What do you think this is? ? pic.twitter.com/vrT2pzQ7jX
— Pete Lau (@PeteLau) August 12, 2022
ஒன்பிளஸ் சிஇஒ பீட் லௌ தனது ட்விட்டரில் "இது என்னவாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்" எனும் கேள்வியுடன் போல்டபில் ஸ்மார்ட்போன் ஹின்ஜ் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
தோற்றத்தில் ஒப்போ பைண்ட் N மாடலின் ஹின்ஜ் போன்றே காட்சியளிக்கிறது.
இது ஸ்மார்ட் போன் பிரியர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.