OnePlus-ன் முதல் மடிப்பு ஸ்மார்ட்போன் - OnePlus V Fold லீக்கான புகைப்படங்கள்
OnePlus-ன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான OnePlus V Fold-ம் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
OnePlus-ன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், OnePlus அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான OnePlus V Fold-ஐ அறிவித்தது. ஆனால் இந்த போன் குறித்த கூடுதல் தகவல்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
மேலும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்த போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான தேதி தெளிவாக இல்லை.
லீக்கான புகைப்படங்கள்
அனால், அதற்கு முன்பே, ஸ்மார்ட்பிரிக்ஸ் (Smartprix) மூலம் தொழிநுட்ப தகவல்களை வெளியிடும் டிப்ஸ்டர் Steve Hemmerstoffer, இந்த OnePlus V Fold தொலைபேசியின் சில படங்களைப் பகிர்ந்துள்ள்ளார்.
OnLeaks/Smartprix
ஆனால், இது One Plus V Fold இன் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். இன்னும் கட்டுமானத்தில் இருக்கும் One Plus V Fold-ன் அசல் வடிவமைப்பு இப்படி இருக்குமா என்பதை உறுதி செய்ய முடியாது.
எப்படியிருந்தாலும், ஒன்பிளஸின் ஃபோல்டிங் ஃபோன் Oppoவின் Find N2 ஃபோல்டுடன் எந்த ஒற்றுமையையும் கொண்டிருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
OnLeaks/Smartprix
alert slider இருக்க வாய்ப்பு
புகைப்படத்தில் ஃபோன் கருப்பு நிறத்தில் உள்ளது, பின்புறத்தில் ஹாசல்பிளாட் பிராண்டிங் உள்ளது. தொலைபேசியின் மற்ற பாகங்களில் உலோகம் மற்றும் கண்ணாடி இருக்கலாம். தொலைபேசியில் alert slider இருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற ஸ்லைடர் ஐபோன்களில் உள்ள ஆடியோ பயன்முறையை மாற்றுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், மடிப்பு ஃபோன்களில் alert slider பொதுவாகக் காணப்படுவதில்லை.
OnLeaks/Smartprix
மற்ற சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் வி ஃபோல்டின் பின்பக்க கேமரா ஒரு வட்ட வடிவில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேமரா சென்சார்கள் இருக்கலாம்.
OnePlus V Fold-ல் 2K 120Hz AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் வெளியிடப்படாத Qualcomm Snapdragon 8+ Gen 2 செயலி மூலம் இயக்கப்படும் என நம்பப்படுகிறது. தொலைபேசியில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கலாம்.
OnLeaks/Smartprix
50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா!
4800mAh பேட்டரி 100W SuperWook சார்ஜிங்கை ஆதரிக்கும். இது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். கவர் டிஸ்ப்ளேவுடன் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கும். OnePlus V Fold போன் இந்தியாவிற்கு பெரும் தள்ளுபடியில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
OnLeaks/Smartprix
OnePlus V foldable phone images, OnePlus V Fold, OnePlus First foldable phone, Images leaked
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |