தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் வெங்காயம்- எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 3 ஸ்பூன்
- வெங்காய சாறு- 1 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில், அவற்றை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மேலும் இதில் வெங்காய சாறுடன் கலந்து தலைமுடியில் தடவவும்.
பின்னர் இந்த ஹேர்மாஸ்க்கை தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு சாறு- 2
- வெங்காய சாறு- 1 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் வெங்காய சாற்றை கலந்து உச்சந்தலையில் தடை மெதுவாக மசாஜ் செய்யவும்.
அடுத்து இதை 10 நிமிட மசாஜ் செய்த பிறகு, தலைமுடியில் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு மென்மையான ஷாம்பு கொண்டு கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |