கொத்து கொத்தா முடி கொட்டுதா? அடர்ந்த கூந்தலுக்கு இந்த ஒரு Hairpack போதும்
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை.
பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் Hairpack-ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வெங்காய சாறு- 5 ஸ்பூன்
- ஆமணக்கு எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
வெங்காய சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
பின் இந்த கலவையை உச்சந்தலையில் மற்றும் முடி மீது நன்கு தடவவும்.
அடுத்து 4 நிமிடங்கள் மெதுவாக கைகளை வைத்து நன்கு மசாஜ் செய்யவும்.
இறுதியாக சுமார் 2 மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- வெங்காய சாறு- 5 ஸ்பூன்
- முட்டை- 1
- லாவெண்டர் எண்ணெய்- 2 சொட்டு
பயன்படுத்தும் முறை
முதலில் முட்டையை வெங்காய சாறுடன் கலக்கவும்.
பின் அதில் 3 சொட்டு லாவெண்டர் எண்ணெயைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இறுதியாக தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் விட்டுவிட்டு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |