நாவூறும் வெங்காய ஊறுகாய் செய்வது எப்படி?
பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளை வீட்டிலேயே செய்துக்கொள்ள தான் அதிகமானோர் நினைப்பார்கள். அதற்கான காரணமாக இருப்பது ஆரோக்கியம் மட்டுமே.
கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளை விட வீட்டிலேயே இலகுவான முறையில் செய்யும் உணவிற்கு ஒரு சுவையும் அதிகம்.
ஆகவே வீட்டில் இருந்துக்கொண்டே எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியாமான வெங்காய ஊறுகாய் செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
சின்ன வெங்காயம் - 100 கிராம்
-
காய்ந்த மிளகாய் - 5
- புளி - நெல்லிக்காய் அளவு
- தனியா - 2 டீஸ்பூன்
-
கடுகு - அரை டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் வதக்கிய வெங்காயத்துடன் புளி, காய்ந்த மிளகாய், தனியா, உப்பு மீண்டும் வதக்கி, ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு தாளித்து, அரைத்து சேர்த்து கிளறி, எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான வெங்காய ஊறுகாய் ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |