தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்! இத்தனை நன்மைகளை தருமாம்
Cholestrol
Onion
Weight Loss
Kidney Disease
Honey
By Kishanthini
நாம் சமையலுக்கு அன்றாடம் சேர்க்கப்படும் சின்ன வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது.
அதிலும் சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் அதன் நன்மைகளை அதிகமாக பெறலாம் என்று கூறப்படுகிறது.
சின்ன வெங்காயங்களை தோல் உறித்து அதை ஒரு டப்பாவில் போட்டு மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றி இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும். பின் அதை தேனுடன் ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.
அந்தவகையில் இப்படி சாப்பிடுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது. இதனால் இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்கிறது.
- சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தையும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது. மேலும் தேன் , சின்ன வெங்காயம் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் செரிமான அமைப்பிற்கு கூடுதல் பலம்.
- காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படுகிறது.
- தினமும் நீங்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில் சின்ன வெங்காயம் உங்களுக்கு கைக்கொடுக்கும். தினம் ஒன்று சாப்பிட்டு பாருங்கள். பலனை நீங்களே உணர்வீர்கள்.
- தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
- எப்போதுமே நெஞ்சு சளியை சேர விடாமல் பார்த்துக்கொள்ள தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்களுக்கு உதவலாம்.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் சிறந்தது. அப்படியெனில் தொப்பையை குறைப்பதற்கு சின்ன வெங்காயம் உதவியாக இருக்கும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US