இணையத்தில் வெளியானது ஒன்பிளஸ் 9 லைட்! விவரங்கள் இதோ
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு நிச்சயமாக ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பொழுது, இந்த வரிசையில் மூன்றாவது மாடலாக ஒன்பிளஸ் 9 லைட் என்ற புதிய லைட் வெர்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் தகவல் வெளியாகியுள்ளது.
இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களில் ஒன்பிளஸ் 9 லைட் பல்வேறு அம்சங்கள் ஒரே மாதிரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
அதன்படி அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா செட்டப், டிஸ்ப்ளே செட்டிங், மென்பொருள் அனுபவம் கொண்டிருக்கும்.
ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் அல்லது 120 ஹெர்ட்ஸ் அமோலேட் டிஸ்பிளேவுடன், பிளாஸ்டிக் பேக் பேனலுடன் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 9 லைட் மாடல் விலை 600 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44,100 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.