Online மூலம் கடன் வாங்கும் தற்போதைய சமுதாயம்: இளைஞர்கள் முகம் கொடுக்கும் சிக்கல்கள்(Video)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல்வேறு மட்டத்தை சார்ந்த மக்களும் கடும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள் முகம் கொடுக்கும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.
அதிகரித்துள்ள வாழ்கைச் செலவு, போதிய வருமானம் இன்மை போன்ற காரணங்களால் பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஓன்லைன் மூலம் கடன் வழங்கி பல பிரச்சினைகளையும் வழங்குகிறார்கள்.
இதில் கடன் எடுக்கும் போது பெரும்பாலும் தங்களது தனிப்பட்ட ஆவணங்களை எடுப்பார்கள். இவ்வாறு இணையம் மூலம் கடன் பெறுவோர் கடும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதிக வட்டி, கடனை திருப்பி செலுத்த முடியாமல் மேலும் கடன் வாங்குதல் என்று கடும் நெருக்கடி நிலையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஓன்லைன் மூலம் கடன் வாங்கிய ஒருவர் பாதிக்கப்பட்ட விடயங்கள் குறி்த்து தெரிவித்த கருத்தினை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |