ஒன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதித்த உயர்நீதி மன்றம்!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசாணையை எதிர்த்து அகில இந்திய கேமிங் ஃபெடரேஷனால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ரம்மி மற்றும் போக்கர் ஆகியவை திறமைக்கான விளையாட்டுகள் என்றும், "பந்தயம் மற்றும் சூதாட்டம்" ஆகியவற்றின் கீழ் வராது என்றும் கூறுப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அகில இந்திய கேமிங் பெடரேஷனின் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி வியாழன் அன்று தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையானது, தற்காலிக தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோரினால், நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
image credit: animationxpress.com
2022 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசாணை எண் 4 ,தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் கேம்ஸ் ஒழுங்குமுறை ஆணை போன்றவை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று ரிட் மனு கோரியது. அத்துடன், ரம்மி மற்றும் போக்கரை வாய்ப்புக்கான விளையாட்டுகளாக வகைப்படுத்தும் அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட அரசாணையை இயற்றியுள்ளதாக மனுதாரர் வாதிட்டார். எனவே, அந்த விளையாட்டுகள் "பந்தயம் மற்றும் சூதாட்டம்" வரம்பிற்குள் வரமாட்டாது.மேலும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கும் ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கடந்த மாதம் தமிழக அரசு அரசாணையை இயற்றியது.
குடும்பங்களை அழிக்கும் ஓன்லைன் கேம்கள்!
ஆன்லைன் கேம்கள் மற்றும் சூதாட்டம் குடும்பங்களை அழித்துள்ளது,மற்றும் தற்கொலைகளுக்கு வழிவகுத்துள்ளது, அத்தோடு கேமிங்கில் அடிக்கடி ஈடுபடுவது பொது சுகாதாரத்தை பாதிக்கிறது, சமூக ஒழுங்கை சீர்குலைக்கிறது மற்றும் பொது ஒழுங்கைப் பராமரிப்பதில் தப்பான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
ஒன்லைன் கேம்களுக்கான தடையை வரவேற்கும் சரத்குமார்!
என்னதான் தமிழ்நாட்டில் ஒன்லைன் கேம்களை தடை செய்தாலும் பிற மாநிலங்களின் பெயரில் பதிவு செய்து ஒன்லைன் சூதாட்டத்தை விளையாடும் சாத்திய கூறுகளை சிந்தித்து தமிழ்நாட்டு அரசும் மத்திய அரசும் இதனைப்பற்றி யோசிக்கவேண்டும் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.