கடவுச்சீட்டுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு!
கடவுச்சீட்டுகளை சேகரிப்பதற்கு புதிய இணைய வழி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று கடவுச்சீட்டைப் பெறுவதற்கான சந்திப்பை மேற்கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் டி.எம்.டி. நிலுஷா பாலசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு திகதியை முன்பதிவு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன்களையே வழங்க முடியும். ஆனால் அந்த டோக்கன்கள் முடிந்த பிறகு, திகதிக்கும் முன்பதிவு செய்ய முடியும்.
அதற்கமைய, இந்த இணையதளத்தின் மூலம் எந்த நபருக்கும் நாளின் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் திகதியை பதிவு செய்யலாம். இந்த நடைமுறை எதிர்வரும் 6ஆம் திகதி செயற்படுத்தப்படவுள்ளது.
எனவே, திகதியை முன்பதிவு செய்வதற்காக ஆறாம் திகதியின் பின்னர் குடிவரவு அலுவலகத்தில் எவரும் வரவேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையில் நவம்பர் இறுதி வரையான காலப்பகுதிக்கு திகதிகள் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒரு திகதியை முன்பதிவு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |