நாளொன்றிற்கு 1.58 யூரோக்கள் மட்டுமே... ஜேர்மனி அறிமுகம் செய்யும் பயணச்சீட்டு
ஜேர்மனி, நாளொன்றிற்கு வெறும் 1.58 யூரோக்கள் மட்டுமே செலவாகும் வகையில் பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்கிறது.
D-Ticket
கடந்த ஆண்டு, 9 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் அந்த பயணச்சீட்டு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணப்பட்டது.
ஆனால், இம்முறை மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது, நாளொன்றிற்கு ஒருவருக்கு பயணம் செய்வதற்கு வெறும் 1.58 யூரோக்கள் மட்டுமே செலவாகும்.
Image: Getty Images
எப்போது இந்த பயணச்சீட்டு கிடைக்கும்?
D-Ticket அதாவது Deutschlandticket என்று அழைக்கப்படும் இந்த பயணச்சீட்டு, ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல் விற்பனைக்கு வருகிறது. மே மாதம் முதல், இந்த பயணச்சீட்டை ஜேர்மனி முழுவதும் பயணிக்க பயன்படுத்தலாம்.
இந்த ஒரே பயணச்சீட்டை வைத்து, அதிவேக மற்றும் தொலைதூர ரயில்கள் தவிர்த்து, மற்ற போக்குவரத்து சாதனங்களில், அதாவது, ரயில், பேருந்து மற்றும் ட்ராம்களில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images