ஜூன் 25 முதல் இவர்களுக்கு மட்டும் ஜேர்மனிக்குள் அனுமதி
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத நாடுகளிலிருந்து வரும் முழுமையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சுற்றுலாப்பயணிகளை மட்டும் நாட்டுக்குள் அனுமதிப்பது என ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
ஜூன் 25 முதல், முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது என ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
ஆனால், அவர்கள் திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் உள்ள நாடுகளிலிருந்து வந்தால் அவர்களுக்கு அனுமதி கிடையாது என ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், தடுப்பூசி பெற்ற மக்கள், நாடுகளை பார்க்க வருகை புரிவதும்,
சுற்றுலாவும் மீண்டும் சாத்தியமாகும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், அதே
நேரத்தில், ஜேர்மனிக்கு வருவோர் பயணம் புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்
கடைசி டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.