இளவரசர் ஹரியும் மேகனும் பிரிந்தால் மட்டுமே அது சாத்தியம்... ராஜ குடும்ப விமர்சகர் கருத்து
இளவரசர் ஹரியும் மேகனும் பிரிந்தால் மட்டுமே, அவருக்கும் அவரது அண்ணன் வில்லியமுக்கும் இடையிலான பிளவு சீராகும் என்கிறார் ராஜ குடும்ப விமர்சகர் ஒருவர்.
ராஜ குடும்ப விமர்சகரான Kinsey Schofield கூறும்போது, இளவரசர் ஹரி தன் மனைவி மேகனைப் பிரிந்து பிரித்தானியாவுக்குத் திரும்பினால் மட்டுமே அவருக்கும் அவரது அண்ணன் வில்லியமுக்கும் இடையிலான உறவு முன்னிருந்த நிலைமைக்குத் திரும்பும் என்கிறார்.
ஆனால், ஹரியைப் பொருத்தவரை, அவர் தன் பிள்ளைகளை இன்னொரு நாட்டில் விட்டுவிட்டு வரமாட்டார் என்கிறார் Kinsey.
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின்போது, இளவரசி கேட், ஹரியையும் வில்லியமையும் பேசவிட்டு பின்வாங்கிய அந்த தருணத்தை யாரும் மறக்கமுடியாது.
ஆக, அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே நபர் இளவரசி கேட்தான் என பலரும் கருதும் அதே நேரத்தில், அவர் அதற்கு தன் கணவரை அவசரப்படுத்த மாட்டார் என்றும், தன் கணவரின் மன நிலைமையை நன்கறிந்த அவர், சரியான நேரம் வரும்போதுதான் அவர் அதைச் செய்வார் என்றும் தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார் Kinsey.