'சொந்த தனியார் ஜெட் விமானம் போல உணர்ந்தேன்' பிரித்தானியர் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்ட பயணம்
குறைந்தது 189 பேர் பயணிக்கவேண்டிய விமானத்தில், பிரித்தானியர் ஒருவர் தனி ஆளாக மன்னர் போல் பயணித்த சம்பவம் நடந்துள்ளது.
முழு விமானத்தில் தனியாக பயணித்த பிரித்தானியர்
மார்ச் 30 அன்று போர்ச்சுகலிலிருந்து வடக்கு அயர்லாந்தில் உள்ள தனது குடும்பத்தைச் சந்திக்க ஒரு பிரித்தானியர் பறந்து கொண்டிருந்தார், ஆனால் முழு விமானத்திலும் அவர் மட்டுமே பயணித்தார் என்பதை விமானம் புறப்படும்போது தான் உணர்ந்தார்.
65 வயதான பால் வில்கின்சன் (Paul Wilkinson), விமான நிலைய வாயிலில் தனது ஜெட்2 விமானத்திற்கு வரிசையில் யாரும் நிறக்காதபோது அவருக்கு சந்தனம் எழுந்துள்ளது.
விமானம் தாமதமாகிவிட்டதா அல்லது ரத்து செய்யப்பட்டதா என்று யோசித்து விமான நிலைய ஊழியர்களிடம் கேட்டார், ஆனால் அவர்கள் அவரை நீங்கள் "விஐபி விருந்தினர்" என்றும் அவர் ஒருவர் மட்டுமே விமானத்தில் இருப்பார் என்று கூறியுள்ளனர். அப்போது, அவர்கள் விளையாட்டாக ஜோக் அடிப்பதாக நினைத்துள்ளார்.
Kennedy News and Media
ஒருவேளை நாம் சீக்கிரம் வந்துவிட்டோமா அல்லது மிகவும் தாமதமாக வந்துவிட்டோமா, என புரியாமல், விமானம் ரத்து செய்யப்பட்டதாக அவர்கள் கூறப் போகிறார்கள் என்று பல விதமாக யோசித்துள்ளார்.
"கிங் பால்"
ஆனால், சற்று நேரத்தில் அவர் விமானத்தில் ஏறினார், விமானம் முழுவதும் கேபின் குழுவினர் அவரை "கிங் பால்" என்று கூறியுள்ளனர்.
அவர் முன் வரிசையில் தனது விருப்பப்படி இருக்கையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, விமானம் பெல்ஃபாஸ்டுக்கு புறப்படுவதற்கு முன் கேப்டனுடன் பேச அனுமதிக்கப்பட்டார்.
Kennedy News and Media
அப்போது தான் அவருக்கு விடயம் தெரிந்தது, அந்த விமானம் போர்ச்சுகலுக்கு விடுமுறைக்கு வந்தவர்களை அழைத்து வந்துள்ளது. ஆனால், விமானம் திரும்பும்போது யாரும் அதில் வரவில்லை, அந்த நேரத்தில்தான், பால் வில்கின்சன் பெல்ஃபாஸ்டுக்குச் செல்ல வேண்டியிருந்து, தனது இருக்கையை முன்பதிவு செய்துள்ளார்.
போர்ச்சுகலில் கோல்ஃப் விடுமுறையில் இருந்த வில்கின்சன் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவசரமாக பெல்பாஸ்ட் சென்றுள்ளார்.
'சொந்த தனியார் ஜெட் விமானம் போல உணர்ந்தேன்'
மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர் தனது பயணத்தை ஒரு பிரைவேட் ஜெட் விமானத்தில் பயணிக்கும் அனுபவத்துடன் ஒப்பிட்டார்.
இதுவே ஒரு தனியார் ஜெட் விமானத்தில் இப்படி தனியாக பயணிக்க குறைந்தது £28,000 ஆகும் என யாரோ கூறியதாகவும், ஆனால் தனக்கு அமைந்தது போல் மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று அவர் கூறினார்.
Kennedy News and Media
அந்த விமானத்தில் வில்கின்சன் மட்டுமே பயணியாக இருந்ததால், கேபின் குழுவினர் அவருக்கு ஒரு ராஜா போல சேவை செய்ததாக கூறினார்.
இந்த அனுபவத்தை பதிவு செய்ய அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
இந்த மூன்று மணி நேர சிறப்பான விமான பயணத்திற்கு அவருக்கு $162 (இலங்கை பணமதிப்பில் ரூபா. 51700) மட்டுமே செலவானது.