மன்னர் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவுக்காக வைத்துள்ள திட்டம்
பிரித்தானிய ராஜ குடும்ப பொறுப்புக்களை உதறியபிறகு, இளவரசர் ஹரி தொடர்ந்து பல கௌரவங்களை இழந்துவருகிறார்.
அவ்வகையில், மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவின்போதும், ஒரு முக்கியமான நிகழ்வில் ஹரி புறக்கணிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
முடிசூட்டு விழாவில் பல்லாண்டு கால மரபுகளை மாற்றிவரும் மன்னர்
மன்னர் சார்லஸ், பல்லாண்டு காலமாக ராஜ குடும்பத்தில் பின்பற்றப்பட்டுவந்த மரபுகள் பலவற்றை மாற்றிவருகிறார். அவ்வகையில், முடிசூட்டு விழாவைப் பொருத்தவரை, முன்போலில்லாமல் குறைந்த நேரத்தில் நிகழ்ச்சிகள் முடிவடைய இருக்கின்றன.
பொதுவாக, மன்னர் அல்லது மகாராணி முடிசூட்டப்பட்டதும், royal dukes என்னும் பதவியிலிருப்போர் மன்னர் முன் மண்டியிட்டு, அவருக்கு மரியாதை செலுத்துவது மரபு.
Image: Getty Image
ஹரிக்கு அந்த வாய்ப்பு கிடையாது
அவ்வகையில், தன் தந்தை முடிசூட்டப்படதும், ஹரி அவர் முன் மண்டியிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி, ஒரு சிறிய உரையாற்றி, கிரீடத்தைத் தொட்டு, மன்னருடைய கன்னத்தில் முத்தமிடவேண்டும்.
பின்னர், சற்று பின்னோக்கிச் சென்று மன்னர் முன் தலைகுனிந்து வணங்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகலவேண்டும்.
ஆனால், இம்முறை ஹரிக்கு மன்னரின் முடிசூட்டுவிழாவில் அந்த கௌரவம் கிடையாது. ஹரி அந்த விழாவில் கலந்துகொண்டாலும் ஒரு பார்வையாளராகத்தான் இருப்பாரே தவிர, மன்னரை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு அதிகாரப்பூர்வமாக இடமில்லை என்பதை அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
Image: Getty
சொல்லப்போனால், இம்முறை இளவரசர் வில்லியமுக்கு மட்டும்தான் மன்னரை கௌரவிக்கும் கௌரவம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹரி தனது அண்ணன் மீது வெறுப்பில் இருக்கும் நிலையில், இந்த விடயம் அவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தலாம்!