வீடுகள் தட்டுப்பாடு நிலவும் சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் இரண்டு பேர் மட்டுமே வாழும் நிதர்சனம்
சுவிட்சர்லாந்தின் சில மாகாணங்களில் 10,000க்கு ஒரு வீடுதான் காலியாக உள்ளது என்னும் நிலை காணப்படுகிறது.
ஆனால், அதே சுவிட்சர்லாந்தில், ஒரு தனி வீட்டில் இரண்டுபேர் மட்டுமே வாழும் நிதர்சனமும் நிலவுகிறது.
ஒரு வீட்டில் இரண்டு பேர் மட்டுமே...
2024ஆம் ஆண்டு இறுதியில், ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் கணக்கிட்டபோது 1.8 மில்லியன் கட்டிடங்கள் மக்கள் குடியிருக்கும் வீடுகள் என கண்டறியப்பட்டது.
விடயம் என்னவென்றால், அவற்றில் சுமார் ஒரு மில்லியன் வீடுகளில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வாழ்வதும், 55 சதவிகித வீடுகளில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே வாழ்வதும் தெரியவந்தது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஒரு நபர் வாழ பயன்படுத்தும் இடம் (The average living space per person) 46.6 சதுர மீற்றர்கள் ஆகும்.
இதே சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில், 10,000க்கு ஒரு வீடுதான் காலியாக உள்ளது என்னும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன், நகைச்சுவையாளரான Lara Stoll என்பவர் சூரிக் நகரில் காணப்படும் ஒரு அன்றாடகக் காட்சியை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
வைரலான அந்த வீடியோவில், சூரிக் நகரில் காலியாக இருக்கும் ஒரு வீட்டைப் பார்வையிட 300 பேர் வரிசையில் நிற்கும் காட்சியைக் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |