ஆபாச உள்ளடக்கங்கள் குறித்த நிபந்தனையை வாபஸ் பெற்றது OnlyFans
உலகின் மிகப் பிரபல்யமான ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட புத்தாக்க படைப்பாளிகளுக்கான களமாக அடையாளப்படுத்தப்படும் OnlyFans நிறுவனம் தனது அறிவிப்பினை வாபஸ் பெற்றுக்கொண்டது.
யூடியுப் போன்றே படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முக்கியமான ஓர் தளமாக OnlyFans கருதப்படுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட படங்கள் காணொளிகளை அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு தொடர்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெரும் எண்ணிக்கையிலான பயனர்கள் பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர்.
மேற்கத்தைய நாடுகளில் இந்த ஒன்லிஃபேன்ஸ் மிகவும் பிரபல்யமான ஒன்றாக காணப்படுகின்றது. ஆபாச படங்கள் மற்றும் காணொளிகள் குறித்த தடை அமுல்படுத்தலை ஒத்தி வைப்பதாக நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
புத்தாக்க படைப்பாளிகள் இந்த தளத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்ற நிலையில், பயனர்களின் எதிர்ப்பினை கருத்திற் கொண்டு OnlyFans நிறுவனம் தனது தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டமை நிரந்தரமானதா தற்காலிகமானதா என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை.