அவுஸ்திரேலியாவின் நிலைமை இன்னும் மோசமடையும்: அதிர்ச்சியளித்த பிரபலம்
எரிபொருள் நெருக்கடியால் அவுஸ்திரேலியாவில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக அரசியல் ஊடகவியலாளர் பீட்டர் வான் ஓன்செலன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.

அத்துடன் தமது நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், எரிபொருள் தட்டுப்பாட்டினை சுட்டிக்காட்டி அவுஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளதை குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எரிபொருள் நெருக்கடிக்கு இடையில் அவுஸ்திரேலியாவின் நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது என அரசியல் ஊடகவியலாளர் பீட்டர் வான் ஓன்செலன் (Peter Van Onselen) கூறியுள்ளார்.
அபாயங்கள் அதிகரித்து வருகின்றன
மேலும் அவர் கூறுகையில், "அவுஸ்திரேலியர்களுக்கான அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. எரிபொருள் விலைகள், மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமின்மை, பணவீக்கம் மற்றும் பாரம்பரிய கூட்டணிகளின் சிதைவு ஆகியவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
அவுஸ்திரேலியர்களின் வாழ்க்கைச் செலவு நிலை ஏற்கனவே எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை அவர்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை. மோதல் தீவிரமடைந்தால் எண்ணெய் விலைகள் மேலும் உயந்தால் அல்லது பொதுவாக பணவீக்க அழுத்தங்கள் தடையின்றி தொடர்ந்தால், பொருளாதார மந்தநிலை சூழலில் தேக்கநிலை பணவீக்கத்தை எதிர்கொள்ளும் கடுமையான அபாயத்தில் நாம் இருக்கிறோம்" என்றார்.

அத்துடன் தற்போது நிலைமை கடினமாக இருக்கிறது; இன்னும் மோசமடைய எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்றும் எச்சரிக்கிறார்.
அதேபோல் தற்போதைய பொருளாதார சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அவுஸ்திரேலியர்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |