48 மணி நேரத்தில் 15,000 முறை மின்னல் தாக்கிய கனேடிய மாகாணம்: எச்சரிக்கை விடுத்த அமைச்சரகம்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 15,000 முறை மின்னல் தாக்கிய நிலையில், காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 16,400 முறை
கனடாவின் இயற்கை வளம் மற்றும் வனத்துறை அமைச்சகம் தங்களது சமூக ஊடக பக்கத்தில் சனிக்கிழமை இது தொடர்பில் குறிப்பிட்டு பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது.
#Lightning and #wildlandfire go hand-in-hand. Thousands of lightning strikes have been observed across the province over the past 48 hours. Usually accompanied by rain, lightning fires can smoulder underground until surface conditions dry out enough to support open flames. pic.twitter.com/K4c75vvM0o
— Ontario Forest Fires (@ONforestfires) July 15, 2023
கடந்த 48 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான முறை மின்னல் தாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சரகம், மொத்தமாக 16,400 முறை மின்னல் தாக்கியுள்ளதாக உறுதி செய்துள்ளது.
ஆனால், ஒன்ராறியோ மாகாண எல்லைகளுக்கும் 100 கி.மீ தொலைவில் பதிவான மின்னல்களின் எண்ணிக்கையும் இதில் இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே ஒன்ராறியோவில் ஒரு வாரம் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
மேலும் வியாழன் அன்று, ரொறன்ரோவைத் தவிர, தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதியில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. மட்டுமின்றி, கிழக்கு ஒன்ராறியோ மிகக் கடுமையான இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டது, ஒட்டாவாவில் ஏற்பட்ட இரண்டு சூறாவளிகளால் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
மூன்று மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது
மின்னல் தாக்கியதில் ஆண்டுக்கு 2 அல்லது 3 பேர்கள் கனடாவில் கொல்லப்படுகின்றனர். மேலும் சுமார் 180 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்புகின்றனர். கடந்த மாதம் ஒட்டாவா பகுதியில் கோல்ஃப் விளையாடிய இருவர் மின்னல் தாக்கியதில், சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.
இதனிடையே, ஒன்ராறியோவில் 2022 ல் பதிவான காட்டுத்தீ எண்ணிக்கையை விட இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஒன்ராறியோவில் 437 பகுதிகளில் காட்டுத்தீ பதிவாகியுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையில் பதிவான 275 காட்டுத்தீ சம்பவத்தில் மனிதர்களால் ஏற்பட்டவை 102 எனவும் இயற்கையாக ஏற்பட்டது 173 எண்ணிக்கை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |