கனடாவில் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்: இளைஞரின் உயிரை குடித்த வேக மோதல்
கனடாவில் நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்களுக்கு இடையே நடந்த அதிவேக பயணத்தில் 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
27 வயது இளைஞர் உயிரிழப்பு
ஒன்டாரியோவின் லைன் 15-க்கு வடக்கே, நெடுஞ்சாலை 11 சவுத்தில் நடந்த சாலை இரண்டு வாகனங்களுக்கு இடையே நடந்த அதிவேக பயண மோதலில் டொராண்டோவை சேர்ந்த 27 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக ஒன்டாரியோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் இடத்திற்கு வந்த பொலிஸார், மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையில் கிடப்பதையும், இளைஞர் ஒருவர் மிகவும் மோசமான காயங்களுடன் அதன் அருகில் கிடப்பதையும் பார்த்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் பிக்கப் டிரக் ஒன்றிக்கும், மோட்டார் சைக்கிள் சாரதிக்கும் இடையே அதிவேக பயண மோதலில் காரணமாக இந்த உயிரிழப்பு பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
போதை ஓட்டுநர்
சம்பவ இடத்திலேயே நின்றிருந்த பிரேஸ்பிர்ட்ஜை பகுதியை சேர்ந்த 37 வயது பிக்கப் டிரக் சாரதி டொனால்ட் ஆஸ்டினை பொலிஸ் அதிகாரிகள் விசாரித்த போது, அவர் மது போதையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதோடு 7 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |