கனடா மாகாணத்தில் வீடு இல்லாத இவர்களுக்கு வீடு கட்ட $2 மில்லியன் முதலீடு! அரசாங்கம் முக்கிய அறிவிப்பு
கனடாவின் ஒன்றாறியோ அரசாங்கமானது வீடில்லாத முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வீடு கட்ட உதவுவதற்காக $2 மில்லியன் பணத்தை முதலீடு செய்கிறது.
இது தொடர்பான அரசின் அறிக்கையில், கிங்ஸ்டனை தளமாகக் கொண்ட திட்டத்தில் $2 மில்லியன் முதலீடு செய்யப்படுகிறது.
இது தொடர்பாக வீட்டுவசதி அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் புதன்கிழமை ஒரு சிறப்பு மண்டல ஆணையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி கிங்ஸ்டனில் ஒன்றரை ஏக்கர் நிலம் முன்னாள் இராணுவ வீரர்கள் கிராமமாக மாற்றப்படும், இதில் 25 சிறிய, அழகான வீடுகள் அமையும்.
ஒவ்வொரு யூனிட்டிலும் ஒரு சமையலறை, குளியலறை, லிவிங் அறை மற்றும் தூங்கும் இடம் இருக்கும். இந்த வீடுகள் வீடற்ற நிலையில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு இடைநிலைக் குடியிருப்புகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
மாகாணத்திற்குச் சொந்தமான நிலத்தை மாற்றுவது மற்றும் ஆஃப்-சைட் சேவைகளுக்கான நிதி ஆகியவை அதன் முதலீட்டிலேயே அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.