பல ஆண்டுகளாக ஒரே எண் வரிசை கொண்ட லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நபர்: அடித்த அதிர்ஷ்டம்
Ontario man snags $25M Lotto Max jackpot: கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒருவருக்கு லொட்டரில் 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
ஒன்ராறியோவைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவர், பல ஆண்டுகளாக ஒரே எண் வரிசை கொண்ட லொட்டரிச் சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஒரே நாளில் கோடீஸ்வரரான கனேடியர்
இந்நிலையில், சமீபத்தில் ஸ்டான்லி வாங்கிய லொட்டரிச் சீட்டுக்கு 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

25 மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 5,92,33,40,855.00 ரூபாய் ஆகும்.
தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் ஒரு பெரும் தொகையை தன் மகளுக்கும் பேத்திக்கும் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு பிளம்பராக இவ்வளவு ஆண்டுகள் பணி செய்துவந்த நிலையில், தனக்கென ஒரு சொந்த வீடு வாங்கவேண்டும், கார் வாங்கவேண்டும் என்னும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்டான்லி.
அத்துடன், தன் காதலியுடன் உலகம் சுற்றிப் பார்க்கவும் திட்டமிட்டுள்ளார் ஸ்டான்லி!