அமெரிக்க தூதர் மன்னிப்புக் கேட்கவேண்டும்: கனடா தரப்பு கோரிக்கை
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஒன்ராறியோ பிரீமியர் செய்த ஒரு செயல் ’வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்தது’ போன்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளது.
கனடா வெளியிட்ட வீடியோ
கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசு சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோவில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன், வரிவிதிப்புக்கு எதிராக வானொலியில் ஆற்றிய உரை ஒன்று இடம்பெற்றிருந்தது.
அந்த வீடியோ ட்ரம்பை ஆத்திரமடையச் செய்ய, கனடாவின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அதன் மோசமான நடத்தை காரணமாக கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் ட்ரம்ப் கூறிவிட்டார், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டும்விட்டன!
ஒன்ராறியோ பிரதிநிதியை திட்டிய அமெரிக்க தூதர்
இந்நிலையில், திங்கட்கிழமை Ottawaவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது, கனடாவுக்கான அமெரிக்கத் தூதரான பீற் (Pete Hoekstra), வாஷிங்டனில் ஒன்ராறியோவின் பிரதிநிதியாக இருக்கும் டேவிட் (David Paterson என்பவரை திட்டியுள்ளார்.
ஆகவே, டேவிடிடம் அமெரிக்கத் தூதரான பீற் மன்னிப்புக்கோரவேண்டுமென ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford கோரியுள்ளார்.
தான் அந்த வீடியோவை வெளியிட்டதற்கான நோக்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டும் என்பதுதானேயொழிய, ஜனாதிபதி ட்ரம்பை காயப்படுத்துவது அல்ல என்று கூறியுள்ளார் Doug Ford.

கனேடியர்கள் எதனால் வருத்தமடைந்துள்ளார்கள் என்பதை பீற் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்கள் மாகாணம் தாக்கப்படுகிறது, எங்கள் நாடு தாக்கப்படுகிறது, எங்களை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என தொடர்ந்து அழைக்கிறார்கள், எங்கள் வேலைகளை எடுத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள், நாங்கள் வேறு எப்படி ரியாக்ட் செய்வோம் என்கிறார் Doug Ford.
இதற்கிடையில், இருநாடுகளுக்குமிடையில் பிரச்சினையை உருவாக்கிய அந்த விளம்பரத்தை திங்கட்கிழமை Doug Ford திரும்பப் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        