அடுத்த புதன்கிழமை கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படவிருக்கும் கனேடிய மாகாணம்: அமுலுக்கு வரும் மாற்றங்கள்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், வரும் புதன்கிழமை கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தலின் இரண்டாம் கட்டத்துக்கு செல்ல இருக்கிறது. அதன்படி என்னென்ன மாற்றங்கள் அமுலுக்கு வர உள்ளன என்பதைப் பார்க்கலாம்.
வெளியிடங்களில் 25 பேர் வரையிலும், கட்டிடங்களுக்குள் 5 பேர் வரையிலும் கூட அனுமதி. உணவகங்களில் உள்ளேயும் வெளியேயும் அமர்ந்து உணவு உண்ண அனுமதி. அத்தியாவசிய கடைகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம்.
அத்தியாவசியமற்ற கடைகள் 25 சதவிகித வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம். ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகள் திறக்கப்பட அனுமதி. முடி திருத்தகங்கள் முதலான கடைகளில், மாஸ்குகள் அணியும் பட்சத்தில் 25 சதவிகித வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம்.
உணவகங்களில், வெளியே அமர்ந்து சாப்பிடும்போது, ஒரு மேஜையைச் சுற்றி ஆறு பேர் வரை அமர்ந்து உண்ண அனுமதி. பெரிய குடும்பங்களுக்கு விதிவிலக்கு. பொது நூலகங்கள் 25 சதவிகித வாசகர்களை அனுமதிக்கலாம். மத சம்பந்தமான நிகழ்வுகள், திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளில் 25 சதவிகித மக்களுக்கு அனுமதி. மூன்று மீற்றர் இடைவெளியுடன் வெளியிடங்களில் உடற்பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி.
வெளியிடங்களில் ஒருவரையொருவர் தொட அவசியமில்லாத விளையாட்டுக்களுக்கு விளையாடுபவர்களின் எண்ணிக்கைக்கு வரையறையின்றி அனுமதி.
சிறுபிள்ளைகளுக்கான முகாம்களுக்கு (Overnight camps) அனுமதி.
திறந்தவெளி கலை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், விளையாட்டுத்திடல்கள், குதிரைப்
பந்தயம், வாகன பந்தயங்களுக்கு 25 சதவிகித பார்வையாளர்களுடன் அனுமதி.
திறந்தவெளி தண்ணீர் விளையாட்டு அமைப்புகள், பொருட்காட்சி, பண்டிகைகளுக்கு 25
சதவிகித மக்களுக்கு அனுமதி.