ஒன்ராறியோவில் முதன்முறையாக 10,000ஐத் தாண்டிய தினசரி கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் முதன்முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியுள்ளதாக அம்மாகாண பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 10,412 ஆகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 9,571 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 10,412 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஒன்ராறியோவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்துவருகிறது.
அத்துடன், மேலும் நான்கு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் ஒன்ராறியோ பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வேகமாக பரவும் Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் காரணமாக, ஒன்ராறியோவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.