நுரையீரல் தொற்று முதல் தோல் அழற்சி வரை சரிசெய்யும் ஊளி மீன்கள்: மருத்துவ பயன்கள் என்னென்ன?
நுரையீரல் தொற்று முதல் தோல் அழற்சி வரையிலான நோய்களை குணப்படுத்தும் அரிய வகை உணவு தான் இந்த ஊளி மீன்கள்.
ஊளி மீன்கள்
பொதுவாக மீன்கள் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய மிகச் சிறந்த உணவு வகையாகும். அதிலும் சில மீன்கள் எண்ணிலடங்காத நற்குணங்களுடன் காணப்படும், அப்படிபட்ட ஒருவகை மீன் தான் ஊளி மீன்கள்.
இவற்றில் அளவுக்கு அதிகமான ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன, அதே சமயம் இவற்றில் கொழுப்பும் மிக மிக குறைவான அளவே உள்ளது.
நற்பலன்கள்
இந்த ஊளி மீன்கள் குடல் புண்கள், நுரையீரல் தொற்று ஆகியவற்றை அடியோடு விரட்டுகிறது. மூளை வளர்ச்சிக்கு இந்த ஊளி மீன்கள் அதிகம் உதவுகின்றன.
கொழுப்பு சத்து இந்த மீன்களில் குறைவாக இருப்பதுடன், ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு மிகவும் நன்மை தருகிறது.
சர்க்கரை நோயாளிகள் இந்த ஊளி மீன்களை சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும்.
ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த ஊளி மீன்கள் பெரும் பங்கு வகிக்கிறது.
மேலும், சரும பாதுகாப்பு, தலைமுடி உறுதித்தன்மை, தோல் அழற்சி, கண் சம்பந்தமான பாதிப்புகள் ஆகியவற்றுக்கு அருமருந்தாக ஊளி மீன்கள் விளங்குகின்றன.
அத்துடன் ஊளி மீன்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிகமாக உட்கொள்வது மிகவும் நன்மை தரக்கூடியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |