CEOவையே அதிரடியாக நீக்கிய Open AI நிறுவனம்! காரணம் என்ன?
ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டு, மீரா மூர்த்தி இடைக்கால CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
Open AI
சாம் ஆல்ட்மேனின் செயல்பாடுகளில் பல விடயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், நிர்வாகக்குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது எனவும் கூறி Open AI அவரை நீக்கியுள்ளது.
இதுதொடர்பாக Open AI வெளியிட்ட அறிக்கையில், 'நிர்வாக இயக்குனர்களின் கூட்டத்தில் சாம் ஆல்ட்மேனின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவர் இனியும் Open AI நிறுவனத்தை முன்னின்று நடத்த முடியும் என தோன்றவில்லை. அதனால் அவர் நீக்கப்படுகிறார்' எனத் தெரிவித்துள்ளது. இது Tech உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம் ஆல்ட்மேன்
இந்த நிலையில் சாம் ஆல்ட்மேன் தனது பதிவில், 'Open AI-யில் எனது பணிக்காலத்தை நான் மிகவும் விரும்பினேன். அது தனிப்பட்ட முறையில் என்னை உருமாற்றியது. உலகத்திற்கும் ஒரு சிறிய மாற்றத்தைக் கொடுத்தது என நம்புகிறேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருமே மிகவும் திறமையானவர்கள். அடுத்து என்ன என்பது பற்றி கூற நிறைய இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
சாம் ஆல்ட்மேனுக்கு பதிலாக கனடாவில் பயின்ற மீரா மூர்த்தி (34) என்பவரை Open AI நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே Chat GPT, DALL E உட்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார். இதற்கிடையில், DeepFake வீடியோக்கள் சர்ச்சை நிலவி வரும் சூழலில், சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமான Open AI தமது CEOவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |