அவுஸ்திரேலிய அரசின் medicare தளத்தை ஹேக் செய்துள்ள Open AI ஏஜென்ட்

Australia Open AI
By Karthikraja Sep 24, 2026 07:23 AM GMT
Report

openai agent hacked australia medicare systems: செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அதிகரித்து வரும் சூழலில், அதன் பாதுகாப்பு குறித்த கவலைகளும் சமீபத்தில் பெருமளவில் அதிகரித்துள்ளது.

தற்போது, அவுஸ்திரேலிய அரசின் Medicare தளத்தை Open AI ஏஜென்ட் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் medicare தளத்தை ஹேக் செய்த Open AI ஏஜென்ட்

AI ஏஜென்ட் ஒன்று, அரசு தளத்தை சோதனையின் போது ஊடுருவுவது இதுவே முதல்முறை ஆகும்.

ஜூன் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் எங்களுக்கு ஆகஸ்டில் தெரிய வந்ததாக Open AI தெரிவித்துள்ளது. 

அவுஸ்திரேலிய அரசின் medicare தளத்தை ஹேக் செய்துள்ள Open AI ஏஜென்ட் | Openai Agent Hacked Australia Medicare Systems

இது குறித்து, செப்டம்பர் 10 அன்று, தினமும் ஒருமுறை கண்காணிக்கப்படும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. 

அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம்

அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம்

இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாகவும், இது குறித்து 3 மாதங்களுக்கு பிறகே Open AI தெரிவித்தது ஏமாற்றமளிப்பதாகவும், மேலும் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட விதமும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலிய அரசின் medicare தளத்தை ஹேக் செய்துள்ள Open AI ஏஜென்ட் | Openai Agent Hacked Australia Medicare Systems

மேலும், "அரசாங்க அமைப்புகள் ஏன் இந்த மீறலை முதலில் கண்டறியத் தவறின என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த Open AI, "இது குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வந்தாலும், நோயாளிகளின் பதிவேடுகள் அணுகப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 

அவுஸ்திரேலிய அரசின் medicare தளத்தை ஹேக் செய்துள்ள Open AI ஏஜென்ட் | Openai Agent Hacked Australia Medicare Systems

எங்கள் மொடல்கள் பதில்களைத் தேட முயன்றபோது, ​​பல அவுஸ்திரேலிய அரசாங்க இணையதளங்கள் மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை நாங்கள் கண்டறிந்தோம். நாங்கள் விரும்பாத செயல்களை எங்கள் மொடல்கள் மேற்கொண்டன" என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் Open AI முகவர்கள், Hugging Face என்ற AI தளத்தை ஹேக் செய்தது. கடந்த 6 மாதங்களில் சோதனை மற்றும் பயிற்சியின் போது 6 முறை ஏஐ மொடல்கள் தவறான வழியில் செயல்பட்டதை ஓபன்ஏஐ கண்டறிந்துள்ளது. 

Open AIயை ஹேக் செய்த 3 இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் வெகுமதி

Open AIயை ஹேக் செய்த 3 இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் வெகுமதி

மேலும், பயிற்சியின் போது தனது தவறுகளை பயனர்களிடம் இருந்து மறைப்பதற்காகப் பொய் தகவல்களை உருவாக்க முயற்சித்துள்ளது.

“முன்னணி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைக் கட்டுப்படுத்துவதற்கான அழைப்பு” என்ற தலைப்பிலான பிரகடனம் செப்டம்பர் 21 அன்று, நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா சபையின் (UNGA) ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.

20 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மொத்தம் 22 அரசியல் தலைவர்கள் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US