ஜூன் 4ஆம் திகதி பள்ளிகள் திறப்பு.., தமிழக அரசின் புதிய உத்தரவு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரை வருகிற 4ஆம் திகதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இதனால் பள்ளிகளில் வகுப்பறை சுத்தம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாநில தகவல் ஆணையம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பள்ளி நுழைவுவாயிலில் கட்டண விவரங்கள் அறிவிப்புப் பலகையாக வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெற்றோர்கள் கல்விக் கட்டண விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |