கனடாவின் எல்லைகளை திறப்பதில் உருவாகியுள்ள புதிய சிக்கல்
கனடா எல்லையில் பணிபுரியும் அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து எல்லைகளை திறப்பதில் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 8,500 அலுவலர்களைக் கொண்ட கனடா எல்லை பணியாளர்கள் சேவை ஏஜன்சியின் இரண்டு யூனியன்களைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக இன்று காலை தெரிவித்துள்ளனர்.
கனடா, அமெரிக்காவுடனான எல்லைகளை திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆகத்து 6ஆம் திகதி வாக்கில் எல்லை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தைத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைவான நபர்களே எல்லை கடந்தாலும், கடுமையான சோதனைகள் மேற்கோள்ள வேண்டியிருந்ததால் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு இந்த ஆண்டு கடினமான ஒன்றாகத்தான் இருந்தது என்று கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க இருப்பதாகவும், எல்லை திறப்பில் எந்த இடையூறும் இருக்காது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.