சுவிட்சர்லாந்தில் முடிவுக்கு வரும் 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒரு வசதி
தொலைபேசி வாயிலாக வானிலை முன்னறிவிப்பை அறிந்துகொள்ளும் பழக்கம் உடையவரா நீங்கள்?
அப்படியானால், உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி...
சுவிட்சர்லாந்தில் கடந்த 30 ஆண்டுகளாக வானிலை முன்னறிவிப்பை அறிய 162 என்ற எண்ணை அழைக்கும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது.
ஆனால், வரும் திங்கட்கிழமையுடன் (நவம்பர் 1) அந்த வசதி முடிவுக்கு வருகிறது.
MeteoSwiss இணையதளம் மற்றும் MeteoSwiss ஆப் ஆகியவை பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து வானிலை முன்னறிவிப்புக்காக 162ஐ அழைக்கும் வழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. ஆகவே இந்த மாதத்துடன் அந்த திட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த திட்டத்தைப் பயன்படுத்தவேண்டுமானால், ஆண்டொன்றிற்கு பல மில்லியன் பேர் அதை பயன்படுத்தினால்தான் அது சாத்தியம். ஆனால், 2020இல் சுமார் 350,000 பேர்தான் அதை பயன்படுத்தியுள்ளார்கள்.
அதற்கு ஒரு முக்கிய காரணம், இப்போது மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகும். கையில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு அதில் ஒன்லைனில் உடனடி தகவல்களைப் பெறுவதற்கு பதில் தொலைபேசியில் அழைப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை அல்லவா!