ஹரி குடும்பத்தினரை மன்னர் சார்லஸின் முடிசூட்டுவிழாவுக்கு அழைக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பம்
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆரம்பம் முதலே மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டிவந்தார்கள்.
தற்போதைய திட்டம்
தற்போது, இளவரசர் ஹரி குடும்பத்தினரை மன்னர் சார்லஸின் முடிசூட்டுவிழாவுக்கு அழைக்கும் விவகாரம் தொடர்பாக, 'Operation Harry In A Hurry' என்னும் ஒரு திட்டம் தயாராகிவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆரம்பம் முதலே மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டினாலும், ஹரியின் ’ஸ்பேர்’ புத்தகம் வெளியானதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசௌகரியத்தால், அவர்களை முடிசூட்டுவிழாவுக்கு அழைக்கக்கூடாது என பல தரப்பினரும் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது உருவாகிவரும் 'Operation Harry In A Hurry' திட்டத்தின்படி, ஹரி மே 6ஆம் திகதி, ஒரு 48 மணி நேர விரைவுப்பயணத்தை மேற்கொள்ளலாம் என கருதப்படுகிறது.
Image: Getty Images
'Operation Harry In A Hurry' திட்டம்
அதாவது ஹரி தனது தந்தையின் முடிசூட்டுவிழாவுக்காக பிரித்தானியா வரும் நிலையில், மே 6ஆம் திகதிதான் ஹரி மேகன் தம்பதியரின் மகனான ஆர்ச்சியின் நான்காவது பிறந்தநாள் என்பதால், மகனுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மேகன் அமெரிக்காவிலேயே இருந்துவிடுவார் என்பதுதான் திட்டம்.
ஆக, மன்னரின் முடிசூட்டுவிழாவில் மேகனை கழற்றிவிடுவதற்காக பக்காவாக ஒரு திட்டம் தயாராவது போலத் தெரிகிறது.
Image: Anadolu Agency via Getty Images
Image: Getty Images

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.