ஆபேரஷன் சிந்தூர் அன்று பிறந்த பெண் குழந்தை.., சிந்தூரி என பெயர்சூட்டிய பெற்றோர்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின்போது பிறந்த பெண் குழந்தைக்கு சிந்தூரி என பெற்றோர் பெயர்சூட்டியுள்ளனர்.
ஆபேரஷன் சிந்தூர்
பஹல்காம் தாக்குலுக்கு பழிதீர்க்க பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்ட 9 இடங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆபேரஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த அதிதீவிர தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூரின்போது பிறந்த பெண் குழந்தைக்கு சிந்தூரி என பெற்றோர் பெயர்சூட்டியுள்ளனர்.
பெற்றோர் கூறுகையில்..,
ஆபேரஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்ற மே 7ஆம் திகதி காலை 9 மணிக்கு எங்களுக்கு குழந்தை பிறந்ததால் நாங்கள் அவளுக்கு சிந்தூரி என்று பெயரிட முடிவு செய்தோம்.
சிந்தூரி வளர்ந்ததும், அவள் இந்திய ராணுவத்தில் சேருவாள் என்றும் அவர் கூறினார்.
நாங்கள் ஒவ்வொரு முறையும் அவளுடைய பெயரைச் சொல்லும்போது இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் வெற்றியடைந்தை நினைவுபடுத்துவோம்.
அது எப்போதும் எங்களுக்கு பெருமை சேர்க்கும் என்று சிந்தூரியின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |