ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றமா?
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் சில ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனால் இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றமா?
இதன் காரணமாக, தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் வரும் மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில் பல வெளிநாட்டு வீரர்களும் பங்கு பெற்றுள்ளதால், பாதுகாப்பு காரணமாக அந்த வீரர்கள் தங்கள் தங்கள் நாட்டிற்கு அழைக்கப்படுவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் தற்போது என்ற மாற்றமும் இல்லை என பிசிசிஐ அறிவித்திருந்தாலும், நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் உள்ள தரம்சாலா விமான நிலைய மூடப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மே 8 ஆம் திகதி தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள, பஞ்சாப் மற்றும் டெல்லி அணி வீரர்கள் ஏற்கனவே அங்கு வந்து விட்டதால் அந்த போட்டியை நடத்துவதில் சிக்கல் இல்லை.
அதேவேளையில், மே 11 ஆம் திகதி அங்கு மும்பை அணி விளையாட உள்ள நிலையில், மும்பை வீரர்கள் அங்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
வீரர்கள் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது அங்கிருந்து சாலை மார்க்கமாக வரலாம். ஆனால் பயணத்திற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
இது போன்ற மாற்று வழிகளை பிசிசிஐ திட்டமிட்டு வந்தாலும், இந்த போட்டியை வேறு மைதானத்திற்கு இடம் மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |